மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்ப பிரச்சனையால் பரிதாபம்.. குழந்தைகளை கொன்ற தாய்.. அதிரவைக்கும் பயங்கரம்..!
குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த தாய், தனது இரண்டு குழந்தைகளையும் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சி கருப்பர் கோவில்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பொன்னாடைக்கன். இவருக்கும் கருப்புக்கொடி பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.
தம்பதிகளுக்கு ஜெகதீசன் என்ற ஆண் குழந்தையும், தர்ஷிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில், பொன்னாடைக்கன். பொள்ளாச்சியில் தேங்காய் உரிக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார்
இதனை தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்த நிலையில், பொன்னாடைக்கன் கோவில் திருவிழாவிற்காக கருப்பர் கோவில்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது பஞ்சவர்ணத்தின் தாயாருடன் குடும்ப பிரச்சினையை பேசி முடிக்க சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.ஆனால், பிரச்சனை பெரிதாகிய நிலையில், குடும்ப பிரச்சனையை நினைத்து மன விரக்தியடைந்த பஞ்சவர்ணம் தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மேலும், தானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, அவரது குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு பொன்னமராவதி காவல்துறையினர் வந்துள்ளனர்.
அத்துடன் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், பஞ்சவர்ணத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.