மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாப பலி; பெற்றோரின் அலட்சியத்தால் நடந்த சோகம்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை தனது பகுதியில் இருக்கும் சிறார்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.
குளத்தின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக 2 வயது குழந்தை குளத்திற்குள் விழுந்து தத்தளித்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிற குழந்தைகள் அலறியபடி உதவி கேட்டு கத்தியிருக்கின்றனர். அங்கு விரைந்த பொதுமக்கள் குழந்தையை மீட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.