மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேட்டதை விட அதிகமாக பணம் கொடுத்த ஏடிஎம்; இன்ப அதிர்ச்சியில் இலட்சக்கணக்கில் பணம் எடுத்த வாடிக்கையாளர்கள்.!
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், கிள்ளுக்கோட்டை பகுதியில் தனியார் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இங்கு வந்து பணம் எடுத்த நபர்களுக்கு ரூ.100 க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் வந்துள்ளது.
ரூ.100 கேட்டால் 500 தந்த ஏடிஎம்
இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த மக்கள், அடுத்தடுத்து அத்தகவலை பகிர்ந்து பலருக்கும் கூடுதல் பணம் கிடைக்கிறது என்ற தகவலை பகிர்ந்தார். இதனிடையே, இதுகுறித்த தகவல் ஏடிஎம் மையத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடுவழியில் பிரசவம்; தாய்-சேயை நலமுடன் பாதுகாத்த அவசர ஊர்தி ஓட்டுநர், மருத்துவ குழுவினர்.!
பணத்தை வசூலிக்கும் பணி தீவிரம்
உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு வருகைதந்த அதிகாரிகள், இயந்திரத்தை சரிபார்த்த ரூ.100 பெட்டியில் ரூ.500 பணம் நிரப்பப்பட்டது தெரியவந்தது. இதனால் ரூ.2.5 இலட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
பணத்தை பெற்றுக்கொண்டவர்களில் நேர்மையான நல்லுள்ளங்கள் அளித்த பணம் ரூ.60 ஆயிரம் மீண்டும் வரவு வைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக பணம் எடுத்து சென்றோரின் விபரத்தை அதிகாரிகள் சேகரித்து, அவர்களிடம் பணம் வசூலிக்க நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
இதையும் படிங்க: நடுவழியில் பிரசவம்; தாய்-சேயை நலமுடன் பாதுகாத்த அவசர ஊர்தி ஓட்டுநர், மருத்துவ குழுவினர்.!