மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவிலில் குடும்பத்தோடு திருட்டு.. 10 வயது சிறுமி மீது 25 இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. பறிபோன உயிர்.. புதுக்கோட்டையில் துயரம்...!
குடும்பத்துடன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வது போல் திருட்டு செயலில் ஈடுபட்டு, ஆட்டோவில் தப்பி சென்ற கும்பல் மக்களால் பிடிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிறுமி 25 பேர் கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யபட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் நாராயணசாமி என்பவர், தனது குடும்பத்தார் 6 பேருடன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பித்தளை பொருட்களை திருடிவிட்டு ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர்.
இந்த தகவல் அப்பகுதி இளைஞர்களுக்கு தெரியவரவே, அவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களில் 25 கி.மீ தூரம் துரத்தி சென்று அவர்களை மடக்கிப்பிடித்துள்ளனர். அப்போது, திருட்டு கும்பலில் இருந்த 10 வயது சிறுமி கற்பகாம்பாள் என்பவரின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
25 இளைஞர்கள் சேர்ந்து நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுமி படுகாயம் அடையவே, தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் 25 இளைஞர்களின் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், அவர்களின் விபரங்களை சேகரித்து கைது நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர். குடும்பத்தோடு கோவிலில் திருட சென்றவர் குறித்து விசாரிக்கையில், அவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் என்றும், நகைக்கடை வைத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளதால் விசாரணை தொடருகிறது.