#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொங்கலுக்கு பீர் குடிக்கும் போட்டி: சமூக வலைதள பதிவால் இளைஞர் கைது.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் வசித்து வருபவர் கணேசன் மூர்த்தி. இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பீர் குடிக்கும் போட்டி நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில், ஒரு நபர் 60 நிமிடங்களில் 10 பியர் பாட்டில்களை காலி செய்தால், வெற்றி பெற்றவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த போட்டியில் கலந்து கொள்வோருக்கு விதிமுறையாக வாந்தி எடுக்கக் கூடாது, குடித்த பியருக்கு பணம் கொடுக்க வேண்டும் என பல்வேறு தகவலையும் பதிவிட்டுள்ளார்.
இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட காவல் துறையினர், அதிரடியாக கணேசமூர்த்தியை கைது செய்தனர்.