#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இயற்கை உபாதையை கழிக்க நின்ற கார்.. திபுதிபுவென வந்த இளைஞர்கள்.. தொடர் வழிப்பறி கும்பல் கைது.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 29). கடந்த 29ம் தேதி இரவில், உறவினர் சீனிவாசனுடன் மச்சுவாடி பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார்.
அச்சமயம், அண்டக்குளம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்தி இருக்கின்றனர். அச்சமயம் மர்ம கும்பல் திடீரென காட்டுப்பகுதியில் இருந்து வந்துள்ளது.
இந்த கும்பல் இருவரையும் தாக்கி, கை-கால்களை கட்டிப்போட்டு ரூ.18 ஆயிரம் ரொக்கம், செல்போன், 12 சவரன் நகை, ஏ.டி.எம் ஆகியவற்றை பறித்துச்சென்றனர். இந்த விஷயம் தொடபிராக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், 2 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஏ.டி.எம் மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன்பேரில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தினேஷ் (21), விஜயப்ரசாத் (18), யோகமணி (22), ரூபன் (19) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தினேஷ் மற்றும் விஜயப்ரசாத் தப்பிச்செல்ல முயன்று எலும்பு முறிவு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இக்கும்பலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.