மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அதிவேகத்தால் தறிகெட்டு இயங்கிய கார்; கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து.. 4 பேர் பரிதாப பலி.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில், மதுரையில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்த கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. அதிவேகத்தி பயணித்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரியவருகிறது.
இந்த விபத்தில், கார் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விபத்தில் பலியான நால்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.