மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து; தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் வசிப்பவர் பழனி (50). இவர் பகல் நேரத்தில் கூலி வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் மாந்தோப்பில் காவலாளியாகவும் உள்ளார்.
இவரது மனைவி யசோதாம்மாள், மகன் அசோக்குமார் (23), பழனியின் தாய் வள்ளியம்மாள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பழனியின் மகன் அசோக்குமார், கடந்த சில தினங்களாக யாரிடமும் சரிவர பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பாட்டி வள்ளியம்மாவிடம் அசோக் குமார் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.
வள்ளியம்மாள் பணம் தராததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் தன துணிகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவரது உறவினர்கள் அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அசோக்குமார் இன்று அதிகாலை தூங்கி எழுந்த போது, பாட்டி பணம் தராத ஆத்திரத்தில் இருந்ததால், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த பாட்டி வள்ளியம்மாள் மீது ஊற்றி தீ வைத்து தானும் தீக்குளத்துள்ளார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் இருவரும் அலறி துடித்துள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அசோக்குமாரின் தாய் யசோதாம்மாள் அசோக் குமாரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்பொழுது அவர் மீதும் தீப்பிடித்தது பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயம் ஏற்பட்ட மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செல்லும் வழியிலேயே அசோக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பாணாவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.