திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன்.. இப்போதான் நிம்மதியா இருக்கு! தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய நடிகர் ராகவா லாரன்ஸ்!!
சாலைகளில் பெண் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் விடுத்த உத்தரவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பயணங்களின்போது பாதுகாப்பு பணிக்காக சாலையின் இரு புறங்களிலும் மணிக்கணக்கில் பெண் காவலர்கள் நிறுத்தப்படுவர். இதனால் இயற்கை உபாதைகள் கழிப்பது தொடங்கி பாதுகாப்பு என பல வழிகளில் அவர்கள் பெருமளவில் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து நீண்ட காலங்களாகவே பல விவாதங்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் பெண் காவலர்களின் சிரமமறிந்து, இனி வரும் நாட்களில் சாலையோரங்களில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி திரிபாதி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து பல தரப்பிலிருந்தும் தமிழக முதல்வருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
🙏🏼🙏🏼@mkstalin @Udhaystalin pic.twitter.com/B7fgVeY9br
— Raghava Lawrence (@offl_Lawrence) June 14, 2021
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், சாலையில் பாதுகாப்புப் பணிகளில் இருந்து பெண் போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்புப் பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காக, அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். நானும் வருந்தியிருக்கிறேன். அந்தவகையில் இந்த ஆணையைக் கண்டு மன நிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.