முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீர் ரெய்டு.!



raid in former minister MR vijayabaskar house

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கும் இவர் அதிமுக ஆட்சியில் 2015 முதல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருந்தபோது வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி டெண்டரை விடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும் கோடிக்கணக்கில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

MR Vijayabaskar

இந்த வருமான வரி சோதனை காரணமாக அவரது வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த வருமான வரி சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென வருமான வரி சோதனை எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டின் முன் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.