அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.!



raid in former minister thangamani house

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 69 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டவர் தங்கமணி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வருமானத்திற்கு அதிமான சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிரான புகாரின் அடிப்படையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் கர்நாடகா மாநிலத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் இந்த சோதனை பட்டியலில் தற்போது தங்கமணியும் இணைந்துள்ளார்.