மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயில்வே வேலைவாய்ப்பு: கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
ரயில்வே துறையில் காலியாக உள்ள 798 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆர்ஆர்பி தெரிவித்துள்ளது.
ரயில்வே புரொடக்ஷன் ஃபோர்ஸ் மற்றும் ரயில்வே புரொடக்ஷன் ஸ்பெஷல் ஃபோர்ஸ் ஆகிய இரு அமைப்புகளும் லெவல் 2 (சம்பளம்- ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை) மற்றும் லெவல் 3 (சம்பளம் ரூ. 21,700 முதல் 69,100 வரை) இடங்களை நிரப்ப உள்ளது.
படிப்புத்தகுதி: SSLC, matric.
வயது வரம்பு: 18-25 வயது வரை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜன.,1, 2019 காலை 10.00 மணிமுதல் ஜன.,30 இரவு 11.59 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைனின் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். SC/ST பிரிவினருக்கு ரூ. 250. பிற பிரிவினருக்கு ரூ. 500. எஸ்பிஐ வங்கி சலானிலும் தேர்வுக்கட்டணத்தை அனுப்பலாம்.
இதற்கான கணினித் தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.