மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென அதிகரிக்கப்பட்ட ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்! என்ன காரணம் தெரியுமா?
கோடை விடுமுறை நாட்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை 3 மாதங்களுக்கு நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், நடைமேடை கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக, நடைமேடை கட்டணத்தை (platform ticket) உயர்த்திக் கொள்வதற்கு ரயில்வே போர்டு அனுமதியளித்துள்ளது.
இந்தநிலையில், கோடைக்காலத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் (platform ticket) 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமேடை கட்டண விலை உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 3 மாதத்திற்கு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.