மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காற்று மாறுபாட்டினால் 12 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
காற்றின் மேற்குதிசை வேகமாறுபாட்டின் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்தித்தொகுப்பில், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இன்று கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையானது 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவில் திண்டுக்கல், மதுரையில் 5 சென்டிமீட்டரும், திருவள்ளூர், ஈரோடு, ராணிப்பேட்டை, புதுக்கோட்டையில் 4 சென்டிமீட்டரும், நீலகிரி, சிவகங்கை, வேலூர், கடலூரில் தலா 1 சென்டிமீட்டரும் பதிவாகியுள்ளது.