தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அடுத்த 24 மணிநேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்.!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக சேலம், தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், இன்று 'கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், தர்மபுரி, கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் திருச்சி' ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 'திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், கரூர்' போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.