தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#RainAlert: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பில், கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை போன்ற 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
நாளை தேனி, சேலம், நீலகிரி, திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
லட்சத்தீவு, கேரளா மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் சூரிய காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.