காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தமிழகம் & புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆந்திர கடலோர பகுதியை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவு வருகிறது. 12-ஆம் தேதி மற்றும் 13-ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 12-ம் தேதியான தென்கிழக்கு கடலோர பகுதி, ஆந்திர கடலோர பகுதி, மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல், தென்மேற்கு வங்கக்கடல்,பகுதியில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகமாக முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.