திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JustIN: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!
தென்மேற்கு பருவமழை உச்சம்பெற்றதை தொடர்ந்து தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அவ்வப்போது உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது.
இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்த காரணத்தால் அங்குள்ள சில தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழையின் காரணமாக செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கூழப்பாவூர், கடையம் ஆகிய ஐந்து தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார்.