திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெளுத்து வாங்கப்போகும் கனமழை! அடுத்த 4 நாட்களுக்கு இங்கெல்லாம் கன மழை பெய்யுமாம்!
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமான மழை பெய்துவருகிறது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணாமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.