தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
விடிய விடிய பெய்த மழை! குளுர்ச்சியடைந்தது சென்னை!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. மழை இன்றி வெயிலால் காய்ந்துபோன சென்னை இன்று பெய்துவரும் மழையால் சற்று குளுமை அடைந்துள்ளது.
பலத்த சூறை காற்றுடன் தொடங்கிய மழை சென்னையின் அணைத்து இடங்களிலும் பெய்துவருகிறது.
மேலும் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று கன்னியாகுமரி, நெல்லை மேற்குதொடர்ச்சி மலையையொட்டியுள்ள இடங்களில் கனமழை பெய்கிறது. இந்நிலையில், நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து சென்னை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.
மழையில் அருந்துகிடந்த மின்சார கம்பியை மிதித்த 13 வயது சிறுவன் பரிதாப பழி.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருவதால் மின்சார கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உண்டு. எனவே மக்கள் அனைவரும் மழை பெய்யும் சமயங்களில் கவனமுடன் செயல்படுமாறு தமிழ் ஸ்பார்க் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இதைப்பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்துங்கள்.