சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.!



rain in chennai

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ,சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. 

rain

கோயம்பேடு, எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, வேளச்சேரி, அடையார், நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் தற்போது வெள்ள நீர் ஓடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.