#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை! மேலும் 2 நாட்களுக்கு மழை நீட்டிப்பு!
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாகவும், வங்கக்கடலில் அவ்வப்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.
இந்தநிலையில் செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற முக்கிய மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதேபோல் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்தநிலையில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையின் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் அதிகாலையில் அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.