#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீரென கொட்டி தீர்த்த மழை! நிற்பதற்கு திண்டாடிய வாகன ஓட்டிகள்!
தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரியில் பெய்துவருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழைப்பொழிவு கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்துவந்த மழை ஒருவாரத்திற்கு முன்பு இடைவெளி கொடுத்தது. இந்தநிலையில் சென்னையில் இன்று வேளச்சேரி, மேடவாக்கம், அடையார், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது.
இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அருகாமையில் இருக்கும் கடைகள் பெட்ரோல் பங்குகள் என தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரமாக மழை பெய்வதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.