ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தமிழகத்தின் இந்த 6 மாவட்டங்களில் கனமழை.! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.!
குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடிமின்னலுடன் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடலோர மாவட்டங்கள், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் எனவும், சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.