ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழையும், மற்ற மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 நேரத்துக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.