புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.! விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்.!



rain in tamilnadu

வங்க கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. அந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டது. நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழைபெய்தது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த நிலையில், வரும் டிசம்பர் 1 மற்றும்   2 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும். இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக மாறி  டிசம்பர் 2-ல் தென் தமிழக கடல் பகுதிகளை நெருங்கும். இதனால், தமிழகம் மற்றும் கேரளத்தில் அன்று அதிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.