ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கோடை வெயிலில் வதைபடும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.!
தமிழகத்தில் சமீப காலமாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலினால் முதியவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையருகே உள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையைப் பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பத்தை தணிக்க, பரவலாக பெய்து வரும் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பல பகுதிகளில் கோடை வெயில், துவங்கி, கொளுத்தியதால், விவசாய சாகுபடி பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவித்த செய்தி பொதுமக்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது.