ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.!
மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதன்மூலம் தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தில் 9 செ.மீ.மழை பெய்துள்ளது.