35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
வங்க கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. அந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டது. நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழைபெய்தது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (29.11.2020) உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 30 ஆம் தேதி மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் முதல் மூன்று தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.