இன்றும் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை! வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்!



rain in tamilnadu


தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாகவும், வங்கக்கடலில் அவ்வப்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

இந்தநிலையில் சென்னை, போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. நேற்றும் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

Rain in chennai

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.