#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் மிக கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலு பெற்றதை தொடர்ந்து பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக உருவானது. இந்த புயலுக்கு டவ் தே என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. டவ் தே புயல் காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டவ் தே புயல் காரணமாக, கேரளா, கர்நாடகம், தமிழகம், மராட்டியம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கு பின்னர், கேரள அரசு திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக மீனவர்கள் மே 17 வரை கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.