#Breaking: இன்று 2 மாவட்டங்களுக்கு மிககனமழை அலெர்ட்; சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



Rain Report today 2 July 2023 

 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் நேற்று 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. 

அடுத்த 2 தினங்களைப் பொறுத்தமட்டில், தென்மேற்கு கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 2ம் தேதி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Latest news

கடலூர், மயிலாடுதுறை மாவட்டம், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்ஸியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம். 

Latest news

மீனவர்கள் வங்கக்கடலில் தென் தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா, அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல், வட தமிழக கடலோர பகுதி, இலங்கை கடலோர பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் காற்று 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். 

மூன்றாம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் அனேக இடங்களில் இடி மின்னனுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.