ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இருக்கு.. இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குமரிக்கடலை ஒட்டிய வளிமண்டல கீழடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி,நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 89.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.