திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இருக்கு..! இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை இருக்கு..! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதியில் வரும் 19-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.