திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் புது தகவல்.
கடந்த சில வாரங்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. மேலும், வரும் அக்டோபர் 20 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நீலகிரி, சேலம், கோவை, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.