#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொட்டி தீர்க்கபோகும் கனமழை! அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுபற்றி பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில் வெப்பசலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இதுபற்றி கூறிய அவர் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.