ஆகஸ்ட் 21 முதல் 24 வரை கொட்டிதீர்க்கபோகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!



Rainfall alert for tamilnadu

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசைகாற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 21,22 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 

ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

chennai

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில், ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை லட்சத்தீவு, கேரளா கர்நாடக கடலோர பகுதி, அதனை ஒட்டிய தென்கிழக்கு கடல் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அப்பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவித்தப்பட்டுள்ளது.