தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
7ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
மத்திய மேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தித்தொகுப்பில், 3-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5,6,7-ஆம் தேதியை பொருத்தவரையில், தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 3,4- ஆம் தேதிகளில் லட்சத்தீவு பகுதிகள், குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிகாற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரபகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும்.