மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்கேன் எடுக்க சென்ற கர்ப்பிணி பெண்.! உயிரிழந்த சிசு.. கதறும் குடும்பத்தினர்.!
7 வருடங்களுக்குப் பின் கருத்தரித்த ஒரு பெண்ணிற்கு குழந்தை வயிற்றிலேயே இறந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில்
அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த இசக்கி என்ற பெண்ணுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. திருமணம் ஆனதிலிருந்து ஒவ்வொரு மாதமும் குழந்தையின் வருகையை எண்ணி காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இப்படியாக 7 வருடங்கள் கழிந்த பின்னர், சமீபத்தில் அவருக்கு குழந்தை தங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் அருகில் இருந்த ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து அதே மருத்துவமனைக்கு அவர் பரிசோதனைக்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளார். மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்கச் சொல்லி அவருக்கு பரிந்துரைத்தனர். அதன் பேரில், அவர் ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் மூன்று நாட்களுக்கு முன்பாக குழந்தை இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் இசக்கியின் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், மருத்துவர்களின் அலட்சியம் தான் குழந்தை உயிரிழக்க காரணம் என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. ஏழு வருடங்களுக்குப் பின் தாயான பெண் குழந்தை பிறக்கும் முன்னரே அந்த குழந்தையை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.