மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடனை அடைக்க மகள்களை விற்பனை செய்யும் பெற்றோர்.. இந்தியாவில் இப்படியொரு அவலமா?.. கண்ணீரை வரவழைக்கும் சம்பவம்.!
கடனுக்காக கையெழுத்து போட்டு மகள்களை ஏலம் விடுவது தொடர்பான சம்பவம் பதற வைத்துள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா பகுதியில் வசித்து வரும் பெற்றோர், தங்களது மகளை கடனுக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது தொடர்பான ஆய்வு நடத்தியதில், பெற்றோர் மகளை விற்பனை செய்ய தயாரானது அம்பலமானது.
அவர்களுக்கு அறிவுரை கூறிய காவல் துறையினர், சிறுமி விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தினர். மேலும், காவல் துறையினரின் வருகையை அறிந்த கும்பல் தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.
இதுகுறித்து தெரிவிக்கையில், பெற்றோர்கள் தங்களுக்கு இருக்கும் கடனை அடைக்க வேறு வழியின்றி தாங்கள் பெற்றெடுத்த மகள்களை சிறுமிகள் என்றும் பாராது விற்பனை செய்கின்றனர். இது தண்டனைக்குரியது. இவ்வாறான செயலில் ஈடுபடக்கூடாது" என்று கூறுகின்றனர்.