மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இராமேஸ்வரம் வந்த வடமாநில மருத்துவ மாணவர் மாரடைப்பால் மரணம்; சொந்த ஊர் செல்லும்முன் நடந்த சோகம்.!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கர் பகுதியை சேர்ந்தவர் அக்ஷய் (வயது 23). இவர் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின்னர் சொந்த ஊருக்கு செல்ல கஜுராஹோ அதிவிரைவு இரயிலில் பயணித்துள்ளார்.
இரயில் பயணத்தின்போது திடீரென அக்ஷய்க்கு மாரடைப்பு ஏற்படவே, அவருடன் வந்த பக்தர்கள் உடனடியாக அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இரயில் நிலையத்தில் தயாராக காத்திருந்த மருத்துவ குழுவினர், அவசர ஊர்தியின் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அக்ஷயை மருத்துவர் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவர் வரும் மாதம் செர்பியா நாட்டுக்கு சென்று மருத்துவம் படிக்கவிருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக அவரின் உயிர் பிரிந்துள்ளது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.