மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூளைச்சாவால் உயிரிழந்த சிறுவனின் கடைசி ஆசையால் அதிர்ந்து போன ரஜினி, என்ன செய்தார் தெரியுமா?
மூளைச்சாவு அடைந்த சிறுவனின் கடைசி ஆசையை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த சிறுவன் அவினாஷ்.இவன் ரஜினியின் தீவிர ரசிகன். இந்தச் சிறுவன் தனது கையால் ரஜினியின் உருவத்தை வரைந்துள்ளான்.
மேலும் நெடுநாட்களாக அவன் வரைந்த ஓவியத்தை ரஜினியின் காண்பித்து அதில் அவரது கையெழுத்து வாங்கவேண்டும் என ஆசைப்பட்டான்.
ஆனால் அதற்கு முன்பு அவன் மூளைச்சாவு அடைந்தான். அதன்பின்னர் அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவினாசின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தனர்.
இந்நிலையில் சிறுவனின் இறப்பிற்குப் பின்பு அவனது கடைசி ஆசை குறித்து ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டது. விவரம் அறிந்த ரஜினி உடனே அவினாசின் குடும்பத்தை சென்னை வரவழைத்தார். பின்னர் இறந்த சிறுவன் வரைந்த ஒவியத்தை பார்த்து அதில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
இவ்வாறு மூளைச்சாவு அடைந்து இருந்த சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் ரஜினி நடந்து கொண்ட சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் ரஜினி துயரத்தில் வாடிய அந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.