மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
நள்ளிரவில் அத்திவாரதரை வழிபட்ட ரஜினி! கோவிலிலும் அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். அந்த வகையில் சயன கோலம் முடிந்து நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது.
அத்திவரதர் தரிசனம் சயன கோலத்தில் தொடங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர். அத்திவாரத்தார் தரிசனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து வந்து அத்திவரதரை தரிசித்தனர். விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
பல அரசியல்கட்சி தலைவர்கள், பிரபலங்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில், இன்று அதிகாலை ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசனம் செய்தார். அவருடன் அவரது மனைவி லதாவும் உடன் இருந்தார். இதற்கு முன்னர் ஜூலை 23ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா தனது மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன் அத்திவரதரை வழிபட்டார்.
ரஜினிகாந்த் வருகையை ஒட்டி நள்ளிரவு நேரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தரிசனத்திற்கு வந்த போதும் வெளியே சென்றபோதும் ஏராளமானோர் ரஜினிகாந்த்தை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். அத்திவரதர் வைபவம் வரும் 16-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 17-ஆம் தேதி மீண்டும் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார்.