தீயாக பரவும் தகவல் : நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லையா? சற்றுமுன் வெளியான விளக்கம்



rajinikanth-health-condition-rumor

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கிவருவதாகவும் வெளியான தகவல்களை அடுத்து இதுகுறித்து விளமளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ.

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன் தொடங்கி தற்போது கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வாங்கியிருந்தாலும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்போதுவரை தொடங்கப்படவில்லை.

rajini

கொரோனா காலத்தில் தனது உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்திவரும் ரஜினிகாந்த் அவ்வப்போது கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அவர்கள் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என யாரோ விஷமிகள் வதந்தியை கிளப்பி விட்டிருப்பதாகம் தெரிவித்துள்ளார்.