திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினிக்காக ரசிகர் செய்துள்ள காரியம்; அட இப்படி பண்ணியிருக்காரேப்பா.!
தமிழ் சினிமாவின் உச்ச திரை நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவலாக உள்ளார்கள். ரசிகர்கள் அழைப்பின் பேரில் கடந்த சில வருடங்களாக அரசியலுக்கு வரவுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்து வருகிறார்.
இதனால் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்றும் பெயர் மாற்றம் செய்தார். மேலும் அவரது பெயரில் டிவி சேனல் துவங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றது. ஆனால் தற்சமயம் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில் திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் ரஜினி தனது அரசியல் கட்சியை துவங்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள். இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த ஸ்டாலின் புஷ்பராஜ் என்ற ரசிகர் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் ஒன்றினை கட்டியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் யார் நல்லவர்கள் என்று தீர்மானித்து ரசிகர்கள் வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.