மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்கம்பிகளை அகற்ற ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்; கையும் களவுமாக சிக்கிய பின்னணி.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது பிலால். இவரின் வீட்டின் மேல்புறம் மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் அதனை அகற்றித்தருமாறு மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மின்வாரிய பணியாளர்களான வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு, உதவி மின் பொறியாளர் செல்வி, மின்சார ஊழியர் கந்தசாமி ஆகியோர் சேர்ந்து ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, பணம் எடுத்து வருவதாக வீட்டிற்கு வந்த பிலால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் நேரடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள், மாற்று சீருடையில் காத்திருந்து லஞ்சம் பெற்ற நபர்களை மடக்கிப்பிடித்தனர்.
விசாரணைக்கு பின்னர் ரமேஷ் பாபு மற்றும் கந்தசாமி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், செல்வியை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.