மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தச்சு வேலை செய்யும் போது மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!... காவல்துறை விசாரணை.!
ராமநாதபுரம் மாவட்டத்தில் மரப்பலகையை அறுக்கும்போது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியில் மரப்பலகைகளை அறுக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. அப்போது மரத்தை அறுக்கும் இயந்திரத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தச்சு வேலை செய்து கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்களின் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மின்சாரம் தாக்கி இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து இரண்டு தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.