திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பைபாஸ் ரோடே நமக்கு மினி பார்.. போதை ஆசாமிக்கு அன்புடன் சிறப்பான கவனிப்பு செய்த காவல் அதிகாரிகள்.!
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சென்டர் மீடியனை அவசரத்திற்கு அலப்பறை செய்து பாராக மாற்றிய போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சென்டர் மீடியன் சாலையில் உள்ளது. இந்த சென்டர் மீடியனை மினி பாராக மாற்றிய குடிபோதை ஆசாமி, அதில் சரக்கு, புகை, தண்ணீர் உட்பட பிற பொருட்களை வைத்து நடுரோட்டில் சரக்கடிக்க தொடங்கியுள்ளார்.
மேலும், அப்பகுதி வழியே சென்ற பொதுமக்களுக்கும் சரக்கு வேண்டுமா? வாங்க அடிப்போம்.. என்பதை போல பாவனை செய்து இருக்கிறான். பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் எதற்ச்சையாக பேருந்து நிலையத்திற்கு வெளியே வரும்போது, குடிகார போதை ஆசாமியின் அலப்பறையை கவனித்துள்ளார்.
இதனையடுத்து, குடிகார ஆசாமியின் அருகே அதிகாரி வந்தபோது, போதை ஆசாமி அவரிடம் அரைபோதையில் வாதம் செய்துள்ளார். பின்னாலேயே வந்த மற்றொரு காவல் அதிகாரி, போதை ஆசாமியை அன்புடன் கவனித்தவாறு தகுந்த முறையில் புத்திமதி கூற தன்னுடன் அழைத்து சென்றார். குடிபோதை ஆசாமி நடுரோட்டில் செய்த அலப்பறை தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.