மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவிலுக்கு சென்று வருகையில் சோகம்.. விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாப பலி., விருதுநகரில் சோகம்.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கழுவன்பொட்டல் கிராமத்தை சார்ந்த 15-ற்கும் மேற்பட்டவர்கள் சரக்கு வாகனத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி சென்று சாமி கும்பிட்டு, பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
இவர்களின் வாகனம் அருப்புக்கோட்டை பந்தல்குடி புறவழிச்சாலை அருகே வந்தபோது, பின்னால் அதிவேகத்துடன் வந்த கார் டாடா ஏஸின் பின்புறத்தில் பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில், டாடா ஏஸ் வாகனம் ஓடையில் சென்று விழுந்துவிடவே, வாகனத்தில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 13 பேர் படுகாயமடைந்து, உயிருக்காக அலறித்துடித்தனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனைவர்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பந்தல்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.