மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரியின் பின் அதிவேகத்தில் மோதிய கார்; இளைஞர் பரிதாப பலி., நண்பர் படுகாயம்.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, வளைய பூக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சரத்குமார் (வயது 23). இவர் சூரிய மின்சார உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த மதன்குமார் (வயது 23) என்பவரும் சரத் குமாருடன் ஒன்றாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், தங்களுடன் வேலை பார்த்து வரும் நபரை காரில் மதுரைக்கு அழைத்து சென்றவர்கள், மீண்டும் தங்களின் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். காரை சரத் குமார் இயக்கி இருக்கிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் கார் அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இராமானுஜபுரம் பகுதியில் வந்தது.
அச்சமயம், கரூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி கண்டைனர் லாரி சென்றது. லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்திற்குள்ளாகவே, விபத்தில் சரத் குமார் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மதனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரத் குமாரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.